
இலங்கையில் போரை நிறுத்து என ப.சிதம்பரம் பேசிய காரைக்குடி பொதுக்கூட்டத்தில் இளைஞர் ஒருவர் முழக்கம்
இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடியில் நேற்று இரவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, கருப்பு சட்டை அணிந்த இளைஞர் ஒருவர் கூட்ட மேடைக்கு முன் வந்து யாரும் எதிர்பாராத நேரத்தில், 'இலங்கையில் போரை நிறுத்து" என்று முழக்கமிட்டார்.
உடனே அருகில் இருந்த காவல்துறையினர் அவரை குண்டுக்கட்டாய் தூக்கிக் கொண்டு, காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்று விட்டனர். அந்த இளைஞரை அருகில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து விவரித்து வருகின்றனர்.
நேற்றே நடந்த இந்த செய்தியை உள்ளுர் தினசரிகளிலோ பிற தொலைக்காட்சிகளிலோ வராதவண்ணம் பார்த்துக் கொள்ளப்பட்டதாய் தெரிவிக்கப்படுகிறது.
ஆயினும் டெல்லியை தலைமையிடமாய் கொண்டுள்ள ஆங்கில தொலைக்காட்சிக்கு இச்செய்திப்படம் கிடைத்துள்ளது. காலை செய்தில் இந்த காட்சிகள் சிறப்பாய் இடம் பெறப்போகிறது.
No comments:
Post a Comment