Tuesday, April 21, 2009

சன் - வெளிச்சத்துக்கு வந்த நியூஸ்


மை எஸ்குவலை(MySQL) ஒரு பில்லியன் டாலருக்கு கடந்த பிப்ரவரியில் வாங்கியது சன் மைக்கிரோசிஸ்டம். இது பழைய கதை...

ஐ.பி.எம்மை ஓரம்கட்டி சன் மைக்கிரோசிஸ்டத்தை தனதாக்கிக்கொண்டது ஆரக்கல் நிறுவனம்... இதுதான் இன்றைய டாக் ஆப் பிசினஸ். பங்கு ஒன்றுக்கு 9.50 டாலர் என்ற விலையில் வாங்கப்பட்ட அதன் மொத்த மதிப்பு 7 பில்லியன் டாலர் ( சுமார் 35,000 கோடி ரூபாய் ) ஆகும். கடந்த வெள்ளிக்கிழமை அன்று சன் மைக்ரோசிஸ்டத்தின் பங்கின் முடிவு விலை என்னவாக இருந்ததோ, அதிலிருந்து 42 சதவீதம் பிரீமியம் வைத்து அதன் பங்குகளை ஆரக்கிள் வாங்கிக் கொள்கிறது.

ஏற்கனவே ஐ.பி.எம்., சன் மைக்ரோசிஸ்டத்தின் பங்குகளை பங்கு ஒன்றுக்கு 9.40 டாலர் வரை கொடுத்து வாங்கிக்கொள்வதாக தெரிவித்திருந்தது. இருந்தாலும் அதன் கோரிக்கையை சன் மைக்கிரோசிஸ்டம் நிராகரித்து விட்டது. அதன் பின் ஒரு மாதத்திற்குப்பின் இப்போது பங்குக்கு 9.50 டாலர் என்ற விலையில் ஆரக்கிளுக்கு கொடுக்கு முன் வந்திருக்கிறது.

ஐ பிளெக்ஸ், பீப்பிள் சாப்ட், ஜேடி எட்வர்ட்ஸ, சைபல் சிஸ்டம்ஸ் உடன் சன்னும் சேர்க்கப்பட்டது. ஏதோ நல்ல காலம் பொறந்தா சரிதான்.

No comments:

Post a Comment